About Me

2009ம் ஆண்டு மயிலை முத்துக்கள் பத்திரிகை தொடங்கப்பட்டது. மயிலாப்பூரைச் சுற்றியுள்ள நிகழ்வுகளும் மற்றும் உபயோகமான கட்டுரைகளும், தகவல்களும் பிரசுரித்து வருகிறோம்..

Wednesday, December 14, 2011

இசைவலம் வந்தபோது....

இசை ரசிகர்களுக்கு, கலைஞர்களுக்கு, சபாக்களுக்கு டிசம்பர் மாதம் வந்தாலே
உற்சாகம் பீறிட்டு எங்கிருந்து வருகிறது என்பது ஆச்சரியமான ஒரு விஷயம்தான்.
சென்னை நகர் முழுவதும் கோலாகலக் கொண்டாட்டம்தான் என்று சொல்ல வேண்டும். சபாக்கள் எல்லாம் நிறைந்து காணப்படுகின்றன. சபாக்கள் இருக்கும் இடங்களில் எல்லாம் கார்கள் மையம் தான்.  டிராபிக் ஜாம்தான்.

டிசம்பர் 3ம் தேதி பிரம்மகான சபா தொடக்கவிழா ஆழ்வார்பேட்டை பெத்தாச்சி அரங்கத்தில் சபாத் தலைவர் நல்லி குப்புசாமி தலைமையில் நடைபெற்றது.
கே. பாலசந்தருக்கு நாடக பத்மம் விருதையும், லட்சுமி விஸ்வநாதனுக்கு நாட்டிய பத்மம் விருதையும், வயலின் கலைஞர் நாகை ஸ்ரீ முரளிதரனுக்கு கான பத்மம் விருதையும் கவிஞர் வாலி வழங்-கினார். விழாவில் சபாவின் துணைத் தலைவரும், சென்னை தொலைக்காட்சி முன்னாள் இயக்குநர் ஏ. நடராசன், செயலாளர்கள் ரவிச்சந்திரன், பால-சுப்பிரமணியன், பொருளாளர் மகாலிங்கம், தொழிலதிபர் என்.சி.டி. பெத்தாச்சி மற்றும் பலர் கலந்து கொண்டனர். விருது வழங்கும் விழா முடிந்ததும் கீதா கிருஷ்ணமூர்த்தியின் வீணையிசைக் கச்சேரி நடைபெற்றது.

இவ்விழா அடுத்த ஆண்டு (2012) ஜனவரி 31ம் தேதி வரை நடைபெறுகிறது.  டிசம்பர் 31ம் தேதி வரை இசைவிழா விழாவும், ஜனவரி 1ம் தேதி முதல் 21ம் தேதி வரை நாட்டிய விழாவும், ஜன. 22ம் தேதி முதல் 31ம் தேதி வரை நாதஸ்வர விழாவும் நடைபெறவிருக்கின்றது.

டிச. 4ம் தேதி பிரபலமான கர்நாடக இசைக் கலைஞர் மதுரை டி.என். சேஷ கோபாலனின் இசை நிகழ்ச்சி நடை பெற்றது.  அற்புதமான முறையில் பாடினார் என்று இவருக்கு சான்றிதழ் வழங்க வேண்டியதில்லை. ஒரு காலத்தில் இவருடைய கச்சேரிக்கு நிற்ககூட இடம் கிடைக்காது. ஆனால் அன்றைய கச்சேரி யில் பழம் ரசிகர்கள் மட்டுமே அதிகம் காணப்பட்டனர். கூட்டம் குறைவாகவே இருந்தது என்பது எவ்வளவு உண்மையோ. அதுபோல் கச்சேரி கேட்டவர்களின் மனது நிறைவானது என்பதும் உண்மை.
*
மங்களம் கணபதி இசை அறக்கட்டளையும் மகாலட்சுமி வெல்ஃபெர் அசோசியேஷனும் இணைந்து இந்த வருடம் தனது 3ம் ஆண்டு இசை விழாவை ஆர்.ஏ. புரத்திலுள்ள மகாலட்சுமி வெல்ஃபெர் அசோசியேஷன் அரங்கத்தில் டிச. 4ம் தேதி முதல் டிச. 11ம் தேதி வரை நடத்துகிறது. 4-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் கடந்த இரண்டாண்டுகளாக எந்நிகழ்ச்சியிலும் பங்கு பெறாத மங்களம் கணபதி தம்பதியினர் இவ்-விழாவில் கலந்துகொண்டது சிறப்பு அம்சம். மங்களம் கணபதிஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றி-யுள்ளார்.

முதல் நிகழ்ச்சியாக விமலா நாகராஜனின் மாணவியர்களின் இசை கச்சேரி நடைபெற்றது.  விழாவில் மாணவியர்கள் அனைவரும் மங்களம் கணபதி இயற்றிய பாடல்களைப் பாடும்போது, அதனை ரசித்து, மகிழ்ந்து கேட்டனர் மங்களம் தம்பதியினர். கச்சேரி முடிந்ததும் சதாபிஷேகம் கண்ட இத்தம்பதியினர் அத்தனை குழந்தைகளையும் ஆசிர்வதித்ததைப் பெற்றோர்கள் பெரும் பாக்கியமாக எண்ணினர்.

‘நான் தாம்பரத்திலிருந்து வர்றேன். மூணாம் கிளாஸ் படிக்கிறேன். இது எனக்கு நான்காவது கச்சேரி. இரண்டு பாட்டு பாடினேன்.’ என்றாள் ஒரு
சிறுமி.
‘நான் நான்காம் வகுப்பு படிக்கிறேன். இரண்டு பாட்டுத்தான் பாடினேன். எனக்கு இன்னும் நெறைய பாட்டுத் தெரியும். அடுத்த தடவை நெறைய பாடுவேன்’ என்றான் ஒரு சிறுவன்.

இருவர் முகத்திலும் ஒரு பெரும் மகிழ்ச்சி தெரிந்தது.
இரண்டாவது நிகழ்ச்சியாக மயிலாப்பூரைச் சேர்ந்த ப்ரியஸ்ரீ சங்கர் கச்சேரி நடைபெற்றது.
*


மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் கிளப்பில் இந்த வருடம் இசைவிழாவிற்கு முன்னதாக  நாட்டிய விழா டிச. 1ம் தேதியே தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. டிச. 4ம் தேதி சஞ்சனாவின் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. அரங்கத்திலுள்ளோர் மனம் நிறைவாகும்படி ஆடினார் என்றால் அது உண்மைதான். அந்தளவிற்கு அற்புதமான நடனத்தை வெளிப்படுத்தினார்.
*
நாதபிரம்மம் இசை மாத இதழ்


சார்பில் 10வது ஆண்டு சங்கீத ராக மகோத்ஸவம் விழா மயிலாப்பூர்
தட்சிணாமூர்த்தி அரங்கத்தில் நடை-பெற்றது. விழாவில் மூத்த கர்நாடக இசைக் கலைஞர் டாக்டர் பாலமுரளி-கிருஷ்ணாவுக்கு ‘நாகரத்னம்’ விருதினை வழங்கினார் யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத் தலைவர்
ஜி. சீனிவாசன். விழாவில் மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர் மோகன் பராசரன், பரத நாட்டியக் கலைஞர் வி.பி.தனஞ்செயன், எஸ்ஆர்எம் குழும இயக்குநர் நாராயணன், இந்தியன் ஆயில் முன்னாள் நிர்வாக இயக்குநர் நாகேஸ்வரன், நாதபிரம்மம் ஆசிரியர் என். சுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். டிச. 18ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது இவ்விழா.
*
டிச. 8ம் தேதி சென்னை சாஸ்திரி அரங்கத்தில் சாந்தி ஆர்ட்ஸ் அறக் கட்டளையின் 16வது ஆண்டு இசைவிழா தொடங்கியது. விழாவில் தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன், வ.வே.சு., சபா நிறுவனர் ராமபத்ரன், அறங்காவலர் காயத்ரி சுந்தரேசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். விழாவில் இசைக் கலைஞர் டி.வி. கோபாலகிருஷ்ணன், வி. சுப்பிரமணியம்,  மிருதங்க வித்வான் திருச்சி சங்கரன், வயலின் இசைக் கலைஞர் ஆர்.கே. ஸ்ரீராம்குமார் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

கேட்பவருக்கு மன அமைதியை அளிக்கக்கூடிய இசை கர்நாடக இசை மட்டும்தான். பல ஆண்டுகள் தான் கற்றுத் தேர்ந்த இசையை புதிய ரசிகனுக்குத் தரும்போது அவன் ஆனந்தமடைகிறான் என்றார் வ.வே.சு.
தினமணி ஆசிரியர் கே. வைத்திய நாதன் பேசும்போது, முப்பது ஆண்டு-களுக்கு முன்னால் மூத்தக் கலைஞர்களின் இசை கச்சேரிகளின் முன்வரிசையில் இளைய கலைஞர்கள் அமர்ந்திருப்-பார்கள். ஆனால் இன்று மூத்த கலைஞர்கள் இசை நிகழ்ச்சியை மட்டுமல்ல. சக கலைஞர்களின் நிகழ்ச்சியைக் கூட கேட்க வேண்டாம் என்ற மனம் இளைய கலைஞர்-களுக்கு இருக்கிறது. இது வேதனையளிக்-கிறது. மனதை திறந்து வையுங்கள் என்றார். இவ்விழா டிச. 8 முதல் டிச. 18ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது.
*

சென்னை தியாகராயநகர் அபிபுல்லா சாலையில் உள்ள ராமராவ் கலா மண்டபத்தில் வியாழக்கிழமை தொடங்கிய நுங்கம்பாக்கம் கலாசார அகாதெமியின் 42-வது ஆண்டு இசை விழாவில் (வலமிருந்து) வாழ்நாள்
சாதனையாளர் விருது பெற்ற பழம்பெரும் நாடக நடிகர் கே.எஸ்.நாகராஜன், நாடக கலாசிரோமணி விருது பெற்ற கோவை அனுராதா, நிருத்ய கலாசிரோமணி விருது பெற்ற நாட்டிய கலைஞர் பார்வதி ரவி கண்டசாலா, சங்கீத கலாசிரோமணி விருது பெற்ற மிருதங்க வித்வான் திருவாரூர் பக்தவச்சலம், விருதுகளை வழங்கிய யுனைடெட் இந்தியா காப்பீட்டுக் கழகத் தலைவர் ஜி.ஸ்ரீனிவாசன், அகாதெமி தலைவர் நல்லி
குப்புசாமி, துணைத் தலைவர் ஏ.நடராஜன், பொதுச்செயலர் எஸ்.நடராஜன், துணைச்செயலர் எஸ்.வெங்கட்ராமன்.ஜனவரி 8-ந்தேதி வரை பல்வேறு வகையான இயல், இசை, நாட்டிய நிகழ்ச்சி-கள் நடைபெறுகிறது.
*

சென்னை தியாகராயநகரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண கான சபாவின் 56வது நாட்டிய விழா தொடங்கியது. விழாவில் நிருத்ய சூடாமணி விருதுகள் பெற்ற (இடமிருந்து) ஒடிசி நாட்டிய கலைஞர்கள் பிஜய்னி சட்பதி, சுருபா சென்னுக்கும், ஆச்சார்ய சூடாமணி விருதை பரதநாட்டிய கலைஞர் சாந்தா தனஞ்செயனுக்கு வழங்குகிறார் கலாசேத்ரா இயக்குநர் லீலாசாம்சன். உடன் (இடமிருந்து) பரத-நாட்டிய கலைஞர் ரோஜா கண்ணன், சபாவின் தலைவர் நல்லிகுப்புசாமி, இந்தியன் ஓவர்சிஸ் வங்கியின் தலைவர் எம்.நரேந்திரா, அப்போலோ மருத்துவ-மனை இணை இயக்குநர் சுனிதாரெட்டி, சபாவின் பொதுச்செயலர் வொய்.பிரபு.
- ரமாநேசன்

No comments:

Post a Comment