About Me

2009ம் ஆண்டு மயிலை முத்துக்கள் பத்திரிகை தொடங்கப்பட்டது. மயிலாப்பூரைச் சுற்றியுள்ள நிகழ்வுகளும் மற்றும் உபயோகமான கட்டுரைகளும், தகவல்களும் பிரசுரித்து வருகிறோம்..

Friday, August 24, 2012

சங்கர நாட்டியலயா வித்யாலயா


ஆகஸ்ட் 18ம் தேதி கான முகுந்தப்ரியா சபாவின் சார்பில் நடைபெற்ற முத்தமிழ் பேரவை டி.என். ராஜரத்தினம் அரங்கத்தில் நாட்டிய மயூரி சங்கீதா சிவக்குமாரின் நாட்டியப் பள்ளியான ஸ்ரீ சங்கர நாட்டிய வித்யாலயாவில் நாட்டியம் பயின்ற மாணவிகளின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. ஒவ்வொரு மாணவிகளும் தங்களுடைய திறமையை அற்புதமாக வெளிப்படுத்தி குரு சங்கீதா சிவக் குமாருக்குப் பெருமை சேர்த்தனர்.
நாட்டிய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவிகள்
சங்கீதா சிவக்குமார் மாணவிகளுடன்...



இந் நிகழ்ச்சியில் நாட்டியப் பள்ளி மாணவி யர் களான வி. திவ்யா, எஸ். திவ்யா,
சி.எஸ். ஹர்ஷலிதா, வி.எஸ். ஹேமாவதி, என். காமலக்ஷ்மி, எம். கெல்ஷியா,
ஜி.எஸ். மானஸா, டி. நாகஜோதி,
சி. பரஜ்வலிதா, எஸ். பிரவீணா,
ஏ.எஸ். ப்ரியங்கா, பி. ரம்யா, ஜி. ரம்யா, ஜி. சாய்பூஜா, டி. சரண்யா, எஸ். ஸ்துதிதா, வி.எஸ். ஷிவானி, எஸ்.கே. சோனாலீஸ்வரி, எஸ்.கே. சுப்ரியா ரேகா ஆகியோர் அழகாக நடனமாடி வந்திருந்த ரசிகர்களை மகிழ்ச்சி ஆழ்த்தினார்கள்.

இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக நாட்டியப் பள்ளியில் ஜூலை 22ம் தேதி சென்னை காளிகாம்பாள் ஆலயத்திலும், ஆகஸ்ட் 3ம் தேதி தஞ்சை புன்னநல்லூர் மாரியம்மன் ஆலயத்திலும், 30 மேற்பட்ட மாணவிகளைக் கொண்டு சிறந்த நாட்டிய நிகழ்ச்சிகளை வழங்கியது. இவ்வருடம் ஆடி மாதத்தில்  தொடர்ந்து மூன்று நாட்டிய நிகழ்ச்சியில் நடத்தி ஹாட்ரிக் சாதனைப் படைத்திருக்கிறது இந்நாட்டியப் பள்ளி.

இந்தப் பள்ளியைப் பற்றி மேலும் அறிய - ஜி. சிவக்குமார், 97101 46567

No comments:

Post a Comment