மயிலாப்பூர் தட்சிணா மூர்த்தி அரங்கத்தில் கானமுகுந்த ப்ரியா சபாவின் சார்பில் பிரபல பரதக் கலைஞர் மீனாட்சி சித்தரஞ்சனின் மாணவி குமாரி மதுமிதா ஸ்ரீராம் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. பன்னிரெண்டே வயது நிரம்பிய மதுமிதா அற்புதமான நடனத்தை வெளிப்படுத்தினார்.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் ‘ஆனந்த நர்த்ன கணபதியே’ என்ற ஊத்துக்காடு வெங்கட சுப்பையர் பாடலுக்கு நடனமாடினார். பிறகு நேரடியாக லால்குடி ஜெயராமனின் ‘செந்தில் வேலா... தேவா..’ என்ற வர்ணத்தில் அந்த வேலவனையே நேரில் கொண்டு நிறுத்தியதுபோல், அந்த நின்ற அழகும், ‘நெற்றிக்கண் கொண்டு மயனை எரித்த சிவனின் புதல்வனே’ என்ற இடத்தில் கனகச்சிதமாக அடவுகளைப் பிடித்து, ப்பாவங்களை கொணர்ந்து ஆடினார். பரதநாட்டியத்தில் தீவிரமான ஈடுபாடு இருப்பதால், தன் குரு மீனாட்சி சித்தரஞ்சனிடமிருந்து நேர்த்தியான, அழகான நடன நுணுக்கங்களைக் கற்று ஆடியிருக்கிறார் என்பது தெளிவாகப் புரிந்தது. முக பாவங்களில், ஏக்கத்தையும், தாபத்தையும் சற்றுக் கோபத்தையும் கொணர்ந்து, இரு கைகளைத் தூக்கி ‘இது தர்மமோ’ என்று காட்டியது ரசிகர்களால் கைதட்டி ரசிக்காமல் இருக்க முடிய வில்லை.
‘அவள் அதுவும் சொல்லுவாள், அநேகம் சொல்லுவாள், அவள் மீது குற்றமென்னடி தோழி!’ என்ற பாடலுக்கு முகத்தை நெட்டியும், அழகு காட்டியும் நடையில் முறுக்கேறி, திறம்பட நடனமாடினார். அதன்பின், ‘அசைந்து ஆடும் மயில் ஒன்று கண்டேன்’ என்ற பாடலுக்கு ராதை கண்ணனை பற்றிக் காணும் கனவு, கண்ணன் குழல் ஊத உயிரினங்கள் அனைத்தும் அசையாது அவனுடைய வாசிப்பில் சொக்கி, என்ன செய்வதென்று தெரியாமல் திக்பிரமையோடு இருந்தன. இதனை நாட்டியமணி மிக அபூர்வமாக ப்பாவங்களைக் கொணர்ந்து, மயில்போல் ஆடி, தில்லானா வேகத்துடன் முகபாவ, அங்க அசைவுகள், உடன் ஆடி அனைத்து ரசிகர்களையும் மகிழ்வித்தார்.
குரு மீனாட்சி சித்தரஞ்சனுடைய ஜதிக்கோர்வைகள் மிக கம்பீரமாகவும், அழகாகவும், நடனத்தைச் சோபிக்கச் செய்தது. பாடகர் கோமதிநாயகம் தன்னுடைய கம்பீரமான இனிமையான குரலினால் கானமழை பொழிந்தார். வயலின் மன்னார்குடி ஸ்ரீனிவாசன், மிருதங்கம் ஸ்ரீ கணேஷ் ஆகியோர் தன் பங்குகளைச் சிறப்பாகச் செய்தனர்.

- ராகப்ரியன்
No comments:
Post a Comment