About Me

2009ம் ஆண்டு மயிலை முத்துக்கள் பத்திரிகை தொடங்கப்பட்டது. மயிலாப்பூரைச் சுற்றியுள்ள நிகழ்வுகளும் மற்றும் உபயோகமான கட்டுரைகளும், தகவல்களும் பிரசுரித்து வருகிறோம்..

Thursday, August 30, 2012

இந்திஷாவின் சாதனா கலை விழா - 2012

நிதிஷ் - இந்து நிதிஷ்

இவ்வுலகில் திறமையும் முயற்சியும் இருந்திட்டால் எதுவும் முடியாதது இல்லையெனும் தாரக மந்திர குறிக்கோளோடு ஸ்ரீமதி இந்து, நிதிஷ் தம்பதியினர் இந்திஷா நாட்டியப் பள்ளியை கடந்த நான்கு வருடங்களாக சிறப்பாக நடத்தி வருகின்றனர். சாதனா சதிதம் நாட்டியம் ஆக. 20, 21ம் தேதிகளில் தி. நகர் வாணி மஹாலில் விமர்சையாக நடைபெற்றது.
வித்யா க்ரீஷ் - க்ரீஷ் மது
ஸ்வேதா ப்ரசாந்தே
இந்திஷா பள்ளி மாணவ - மாணவிகள் சிறுவர்கள், வாலிபர் மற்றும் தம்பதியரும் கண்ணைக் கவரும் பரத நாட்டியங்கள் ஆடி வந்திருந்த அவை நிறைந்த ரசிகப் பெருமக்களை வியப்பில் ஆழ்த்தி மகிழ்வித்தனர். தம்பதிகளாய் நடனமாடிய ஸ்ரீமதி வித்யா க்ரீஷ் - க்ரீஷ் மது (கலாக்ஷேத்ரா) நடனம் படுதூள்.’

 மேலும் கோரியோக்ராபி வெகு அருமை. பின்னர் ஸ்ரீமதி ப்ரியதர்ஷிணி கோவிந்த் மாணவியான குமாரி. ஸ்வேதா பிரசாந்தேவின் பரத நாட்டியம் அருமையோ அருமை. அவ்வளவு அழகாக இருந்தது. அவரின் நாட்டிய பதமும் (பேஹாக் பதம்) மற்றும் வர்ணம் ரசிகர்கள் கண்ணுக்குத் தெவிட்டாத விருந்து.
மீனாட்சி ஸ்ரீனிவாசன்
ஆக. 21ம் தேதி பரத நாட்டியமாடிய குமாரி மீனாட்சி சீனிவாசன் நாட்டியமோ பிரமாதம். அவளின் பாவமும் கண்களின் அசைவும் கால், கைகளின் அழகிய நளினமும் ரசிகர்களுக்கு விருந்தே. நிறைவாக தம்பதிகளாய் நடனமாடிய ஸ்ரீமதி இந்து நிதிஷ் - நிதிஷ் நாட்டியமும் இந்த கலை விழாவிற்கு மகுடம் வைத்ததுபோல் இருந்தது. இவர்களின் நடனம் அரியதொரு அற்புதமாக ரசிகர்களின் உற்சாகத்தை மிகைப்படுத்தும் வகையில் தரமோடு நிறைவாக இருந்தது.

மொத்தத்தில் இந்திஷா சாதனா கலை விழாவில் ஆடிய கலைஞர்கள் நாளைய நாட்டிய உலகில் தங்கமாக ஜொலிப்பார்கள் என்பதில் ஐயமில்லை என்று அங்கு வந்திருந்த மூத்தக் கலைஞர்கள் பலரும் தெரிவித்தனர்.

இமெயில் - Irnidheesh@gmail.com, indumohan84@gmail.com

No comments:

Post a Comment