About Me

2009ம் ஆண்டு மயிலை முத்துக்கள் பத்திரிகை தொடங்கப்பட்டது. மயிலாப்பூரைச் சுற்றியுள்ள நிகழ்வுகளும் மற்றும் உபயோகமான கட்டுரைகளும், தகவல்களும் பிரசுரித்து வருகிறோம்..

Wednesday, February 15, 2012

வைஷ்ணவி கார்த்திக்

கான முகுந்தப்ரியா சபாவின் சார்பில் ஆங்கிலப் புத்தாண்டு தினமான ஜனவரி 01, 2012 பாரதிய வித்யா பவன் மெயின் ஹாலில் வைஷ்ணவி கார்த்திக் நாட்டிய நிகழ்ச்சி நடை பெற்றது.

வர்ணம் ஆனந்தபைரவியில் ‘சகியே...’ என்ற பாட்டுக்கு நாட்டிய மணி மிக ஸ்லாக்கியமாக நடனமாடி னார். பாட்டின் வரும் வழியில் ‘மலர் தூவிய படுக்கையில், உல்லாசமாக என்னுடைய மனத்தை உன்னிடம் கொடுத்துவிட்டேன்’ ஆகையால் சகியே அவரிடம் சென்று அழைத்து வா! மிக அழகாக உள்ளத்தில் எழும் உணர்ச்சிகளை, முகத்தை இருபுறம் திரும்பி, விழிகளின் ஏக்கத்தையும், ஆர்வத்தையும், மிக அழகாகக் காட்டினார்.

பிறகு சரணத்தில் கானமயிலே!  அதிக மையலால், ரொம்பவும் மயங்கிப் போனேன்!  இரவில் தூக்கம் வருவதில்லை, ஏதோ ஒரு வகையில் உன்னையே நினைத்துக் கொண்டு இருக்கிறேன்.  உன் பிரிவை என்னால் சலித்துக் கொள்ள முடியவில்லை!

சகியே , என்னுடைய ஆவலையும், தாபத்தையும் சொல்க... என்கிற அடிகளுக்கு வைஷ்ணவி கார்த்திக், தன்னுடைய விழிகளின் அசைவுகள் மூலமாகவும், முக ப்பாவத்துடனும், முத்திரைகளாலும், அழகாக மிக நேர்த்தியாக, பாதங்களின் அசைவுகளாலும், வெவ்வேறு கோணங் களில் நின்று ஆடி, குதித்து குதித்து ஆடி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

பிறகு தில்லானா, ‘கதனகதூகலம்’ பாலமுரளி கிருஷ்ணாவின்சாஹித்யத் திற்கு, புதுமையாகவும், தன்னுடைய ஆட்டத்திற்கு வேகத்தைக் கூட்டியும், முகம், கழுத்து அசைவுகளினாலும், பலவிதமாக ப்பாவங்களையும், அடவுகளையும் காட்டி மிக அற்புதமாக நடனமாடினார்.

இவருக்கு உறுதுணையாக நட்டுவாங்கம், பாடகர், மிருதங்கம், வயலின், ஆகியோர் தங்களின் பங்களிப்பையும் வெகுசிறப்பாகச் செய்தனர்.
மொத்தத்தில் புத்தாண்டு அன்று நடனத்தைக் காண வந்த அனைவரையும் வைஷ்ணவி கார்த்திக் சிறந்த நடனத்தின் மூலம் மகிழ்வித்தார் என்றுதான் கூறவேண்டும்.
- ராகப்ரியன்

No comments:

Post a Comment