About Me

2009ம் ஆண்டு மயிலை முத்துக்கள் பத்திரிகை தொடங்கப்பட்டது. மயிலாப்பூரைச் சுற்றியுள்ள நிகழ்வுகளும் மற்றும் உபயோகமான கட்டுரைகளும், தகவல்களும் பிரசுரித்து வருகிறோம்..

Wednesday, February 15, 2012

பவித்ரா முரளிதரன்

31-12-11அன்று,பாரதிய வித்யா பவன் மெயின் ஹாலில் கான முகுந்தப்ரியா சபாவின் சார்பில் குமாரி பவித்ரா முரளிதரன் நடன நிகழ்ச்சி நடை பெற்றது.

பதின்மூன்றே வயது நிரம்பிய குமாரி பவித்ரா ‘நடனம் செய்யும் பாதம்’ என்ற முதல் வரிக்கு மிகவும் சிறந்த முறையில் நடனமாடினார். பிறகு வர்ணம் ‘நவசக்தி’ முக்கியமாக அம்பாளை குறிப்பதாகும். இதில் அம்பாளுடைய குணாதிசயங்களை இந்த நாட்டியமணி பெருதிறம்பட காட்டி நடனம் செய்தார்.

மஹிஷாசூரனை வதம் செய்ய ‘கோபத்துடனும் வீரத்துடனும்’ நடனமாடினார். கண்களின் கோபத்தை கொணர்ந்து, சக்தி ஆயுதத்தை எடுத்துக்கொண்டு, யுத்தம் செய்ய அழகிய மேடையை முழுவதுமாக ஆக்ரமித்துக் கொண்டு மஹிஷாசூரனுடன் மோதுவது நன்றாக இருந்தது. அபிராமபட்டர் மேல் வைத்திருந்த அளவுக்கதிக-மான கருணையால், அவர் சந்திரன் வராத நாள் அன்று சந்திரன் வருவார் என்று கூற, அவருடைய அளவுகடன்ந்த பக்தியின் அடிப்படையில் தன்னுடைய தாடங்கத்தை கழற்றி வானில் ஏறிய பிரகாசத்துடன் சந்திரன் தோன்றும் இடத்தில் நடனமணி நேர்த்தியாக நடனம் செய்தார். அரங்கிலுள்ள அத்தனை பேரும் கைதட்டி ரசித்தனர்.

சாத்வீகமான பக்தியை காண்பிக்கும் விதத்தில் உமையவள், மயில் கோலம் பூண்டு திருமயிலையில் கபாலீஸ்வரரை பூஜை செய்வதை மிக அற்புதமாக தன்னுடைய பணிவான முக பாவத்திலும், கண்களில் பக்தியைக் கொணர, புஷ்பங்களை எடுத்து பூஜை செய்யும் காட்சியே காட்சி!!

தில்லானாவை மிக அழகாக, நளினமாக, துரிதகதியில், சரியான முத்திரைகளையும் காட்டி, கை அசைவுகளும், வெவ்வேறு கோணங்களில் நின்றும், ஆடியும், அரங்கையே முழுவதுமாக ஆக்ரமித்துக் கொண்டு நடனம் செய்து எல்லாரும் பாராட்டத்தக்கவாறுஆடினார்.

இவருடைய நடனத்துக்கேற்றவாறு பாடகரும், பக்க வாத்தியங்களும் ஒத்துழைத்தனர் என்பதும் பாராட்டத்-தக்கது.
 - ராகப்ரியன்

No comments:

Post a Comment