About Me

2009ம் ஆண்டு மயிலை முத்துக்கள் பத்திரிகை தொடங்கப்பட்டது. மயிலாப்பூரைச் சுற்றியுள்ள நிகழ்வுகளும் மற்றும் உபயோகமான கட்டுரைகளும், தகவல்களும் பிரசுரித்து வருகிறோம்..

Thursday, December 29, 2011

சாய்ஹரிணி ராமகிருஷ்ணன்


அமெரிக்கா, டெக்சாஸ் மாநிலத்தில் டல்லாஸ் நகரில் வசித்து வருபவர் சாய்ஹரிணி ராமகிருஷ்ணன். டிசம்பர் சீசன் போது அங்கிருந்து இங்கு வந்து,  பல சபாக்களில் வீணையிணை கச்சேரி செய்வார். அதுபோல் இந்த வருடம் கானமுகுந்த ப்ரியா சபாவில் பி.எஸ்.மேல்நிலைப்பள்ளியில் வளாகத்திலுள்ள விவேகானந்தா ஹாலில் டிசம்பர் 22, 2011 அன்று தனது இசைக் கச்சேரியை நிகழ்த்தினார்.



தொடக்கத்திலேயே தெரிந்தது இவரது திறமை. போக போக அதுமேலும் மெருகேறியது. அதிலும் ரேவதி ராகத்தில் அமைந்த ‘போ ஷம்போ’ என்ற பாடலும், கானடா ராகத்தில் அமைந்த ‘அலைப்பாயுதே’ என்ற பாடலும் வீணையிசையில் கேட்கும்போது தனிசுகமாகவே இருந்தது. இந்த இரண்டு பாடல்களையும் ரசிகர்கள் ஒவ்வொருத்தரும் மனதுக்குள் முணுமுணுக்க சாய்ஹரிணி அற்புதமாக, அருமையாக வாசித்தது சிறப்பு.
 கச்சேரி என்று வந்துவிட்டால் ராகம், தானம், கல்பனா ஸ்வரம் ஆகியவை கேட்காமல் இருக்க முடியுமா? அதையும் சாய்ஹரிணி விடவில்லை. பந்துவராளி ராகத்துக்கு இவர் வாசித்த ராகம், தானம், கல்பனாஸ்வரத்தை ரசிகர்கள் கைதட்டலைப்  பெற்றன.

மொத்தத்தில் கேட்க வந்தவர்களை மெய்மறக்க செய்தார் சாய்ஹரிணி. இவருக்கு பக்கபலமாக மிருதங்கம் கே.எச்.வினீத், கடம் ராம்தாஸ், தபேலா சாய் ஈஸ்வர், தபேலா ஆகியோரும் சிறப்பாக செயல்பட்டனர்.

தாயே குருவாக அமையும் வாய்ப்பு எளிதில் யாருக்கும் கிடைக்காது. இவருக்கு அதுவும் கிடைத்தது. இவருடைய தாயார் கலைமாமணி வசந்தா கிருஷ்ணமூர்த்தி.  தாய் மட்டுமல்லாமல் திருமதி கமலா அஸ்வத்தாமா விடமும் வீணை இசை கற்றுக் கொண்டார். இசை நிகழ்ச்சிகளை செய்வதோடு மட்டுமல்லாமல் டல்லாஸ் நகரில் இசைப் பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார். இப்பள்ளியில் வீணை மற்றும் குரலிசை கற்றுத்தரும் சாய்ஹரிணி, தனது மாணவர்கள் பலரும் அரங்கேற்றம் செய்வதற்கு உதவியிருக்கிறார்.
- ரமாநேசன்

No comments:

Post a Comment