About Me

2009ம் ஆண்டு மயிலை முத்துக்கள் பத்திரிகை தொடங்கப்பட்டது. மயிலாப்பூரைச் சுற்றியுள்ள நிகழ்வுகளும் மற்றும் உபயோகமான கட்டுரைகளும், தகவல்களும் பிரசுரித்து வருகிறோம்..

Wednesday, December 21, 2011

இசைவலம் வந்தபோது....


11.12.2011 அன்று மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் இசை விழா தொடக்க நாளன்று ‘சங்கீத கலா நிபுணா’ விருதினை கர்நாடக இசைப் பாடகி அருணா சாய்ராமுக்கும், ‘நாட்டிய கலா நிபுணா’ விருதினை அடையாறு லட்சுமணனுக்கும் யுனைடெட் இந்தியா காப்பீட்டு கழகத் தலைவர் ஜி. சீனிவாசன் வழங்கினார். உடன சபாத் தலைவர் நல்லி குப்புசாமி.


நாரதகான சபாவில் 16.12.2011 அன்று இயல், நாட்டிய, நாடக விழா 2011ல் நாதஸ்வர வித்வான் என்.சி. கணேசனுக்கு ‘திருநெல்வேலி சுப்பிரமணிய அய்யர்’ விருதும், கமலாமூர்த்திக்கு மூத்த இசைக் கலைஞருக்கான விருதும், எஸ்.ஆர். ஜானகிராமனுக்கு நாதபிரம்மம் விருதும் வழங்கினார் பூஜ்ய ஸ்ரீ பிரேமா பாண்டுரங்கன், அருகில் சபா செயலாளர் ஒருவரான மோகன் ஸ்ரீனிவாசன்.


ஸ்ரீ பார்த்தசாரதி சபாவின் 111வது இசை விழா 15.12.2011 அன்று தொடங்கியது. திருமலா திருப்பதி இளையகோயில் கேள்வி அப்பன் ஸ்ரீ கோவிந்த ராமானுஜ சின்ன ஜீயர் சுவாமிகள் கர்நாடக இசைப் பாடகி எஸ். சௌம்யாவுக்கு சங்கீத கலாசாரதி விருதினை வழங்கினார்.  பேராசிரியர் டி.என். கிருஷ்ணனுக்கு மணி அய்யர் நூற்றாண்டு விருது, இளம் கலைஞர் பிரசன்ன வெங்கட்ராமனுக்கு எம்.எல்.வசந்தகுமாரி விருதினையும் வழங்கினார். விழாவில் சபா தலைவர் நல்லி குப்புசாமி, பாடகி சுதா ரகுநாதன், நித்யஸ்ரீ மகாதேவன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


11.12.2011 அன்று எம்.எஸ் நினைவு நாளையொட்டி மூத்த கலைஞர் ராதா விஸ்வநாதனுக்கு எம்.எஸ். சுப்புலட்சுமி விருதினை மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி வழங்கினார்.  உடன் நல்லி குப்புசாமி.

No comments:

Post a Comment