About Me

2009ம் ஆண்டு மயிலை முத்துக்கள் பத்திரிகை தொடங்கப்பட்டது. மயிலாப்பூரைச் சுற்றியுள்ள நிகழ்வுகளும் மற்றும் உபயோகமான கட்டுரைகளும், தகவல்களும் பிரசுரித்து வருகிறோம்..

Thursday, December 29, 2011

சுபாஷிணி பார்த்தசாரதி

நாரத கான சபாவுக்குள் செல்லும் ஆவல் எழுந்தது.மினி ஹாலில் டாக்டர் சுபாஷிணி பார்த்தசாரதியின் கச்சேரி.


கருணிம்ப சஹானா வர்ணத்துடன் தொடங்கினார்.எடுத்த எடுப்பிலேயே புரிந்து விட்டது,இவரது ப்ளஸ் இவரின் இனிமையான சாரீரம்தான் என்று.

தேவ தேவ கலயாமிதே என்ற மாயா-மாளவ கௌளை ராகப் பாடல். ஜாத ரூப நிபசேல என்ற இடத்தில் நிரவல், ஸ்வரம்.  இரண்டும் வெகு ஜோர்.   தொடர்ந்து ஓங்கி உலகளந்த என்ற திருப்பாவையை மார்கழி மாதத்திற்கு பொறுத்தமாக பாடினார்.

இதன்பின், ஆனந்த பைரவி ராகத்தில் காப்பதுவே உனது பாரம் என்ற உருப்படி. சிட்டை ஸ்வரம் இல்லாமலா? தஞ்சை நால்வரில் ஒருவரான பொன்னையா பிள்ளையின் சாஹித்யம் அல்லவா? விறுவிறுப்பாக இருந்தது.

அடுத்து வந்தது ஒரு தோடி! ஆஹா!  கோடி பெறும்! நின்னே நம்மி நானு என்கிற சியாம சாஸ்திரியின் க்ருதி. பாவ-பூர்வமான ஆலாபனையும் கஞ்ச தளாய தாஷியில் நிரவல், ஸ்வரமும் , தோடி ராகத்தை கண்முன் கொண்டு நிறுத்தின. அடுத்து பாடினார் பதம் ஜாவளி.அது இவரது ஹோம் கிரவுண்ட்.(பிருந்தா)  முக்தாவிடம் பிரத்யேக பயிற்சி பதம் ஜாவளியில் பெற்று அதில் டாக்டர் பட்ட மும் பெற்றவராயிற்றே!

நாரீமணி என்று தொடங்கும் தர்மபுரி சுப்பராயரின் கமாஸ் ராக ஜாவளி-யும், ஏலயடரா என்ற பைரவி ராக ஜாவளி- யும் பாடி தனது முத்திரையைப் பதித்-தார். துங்காதீரவிராஜம் (யமன் கல்யாணி) பாடலுடன் நிறைவு செய்தார். பக்க-வாத்யம் வாசித்த ஞானசுந்தரம், கணபதி ராம், ஆதம்பாக்கம் சங்கர் குழு, முழு ஒத்துழைப்பு தந்து நிகழ்ச்சியை மெருகேற்றியது.

இரண்டு மணி நேரம் என்று தோன்றாத வண்ணம் நிகழ்ச்சியில் ஒரு முழுமை இருந்தது. காலைப் பொழுது இனிமையாகக் கழிந்தது.

- சந்திரிகா ராஜாராம்

No comments:

Post a Comment